கிருஷ்ணகிரி நகரில் சென்னை, பெங்களூரு, ராயக்கோட்டை சாலை என முக்கியமான சாலைகள் உள்ளன. இந்த சாலைகளில் ஏராளமான கடைகள் உள்ளன. மேலும் பொதுமக்கள் அதிக அளவில் சாலைகளை பயன்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக சென்னை சாலையில் பகல் நேரங்களில் லாரிகள் மற்றும் சரக்கு வேன்கள் நிறுத்தப்படுவதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது . மேலும் பஸ் நிறுத்தங்களில் நீண்ட நேரம் பஸ்கள் நிறுத்தி செல்வதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகிறார்கள். எனவே பகல் நேரங்களில் சாலைகளில் கனரக வாகனங்களை நிறுத்துவதை தடுக்க போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.