கோவை வடவள்ளியில் இருந்து மருதமலை செல்லும் சாலையில் பெருமாள் கோவில் அருகே தனியார் தொலைத் தொடர்பு துறை ஊழியர்கள் பள்ளம் தோண்டி ஒயர்களைப் பறித்து விட்டு மீதியுள்ள டெலிபோன் ஒயர்களை அப்படியே பண்டலாக சுருட்டி ரோட்டில் விட்டு விட்டு சென்றுவிட்டனர். இதனால் அந்த வழியாக வாகனங்களில் செல்லுவோர் இந்த ஒயர்களில் சிக்கி கீழே விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே நெடுஞ்சாலை துறையினர் சம்பந்தப்பட்ட தனியார் மீதமுள்ள ஒயர்களை அப்புறப்படுத்த வேண்டும்.