கனரக வாகனங்களால் போக்குவரத்து நெரிசல்

Update: 2022-08-27 15:41 GMT

 கரூர் மாவட்டம், குளித்தலை நகரப் பகுதியில் உள்ள பல்வேறு வகையான கடைகளுக்கு பெரு நகரங்களில் இருந்து லாரிகள் மூலம் உடைகள், மளிகை பொருட்கள், அரிசி, உரம் உள்பட பல்வேறு பொருட்கள் கனரக சரக்கு வாகனங்கள் மூலம் குளித்தலை நகர பகுதியில் உள்ள அந்தந்தந்த கடைகளின் முன்பு நிறுத்தப்பட்டு இறக்கி வைக்கபடுகிறன. இந்த சரக்கு வாகனங்கள் நீண்ட நேரம் அந்த பகுதிகளில் நிறுத்தப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில் சரக்கு வாகனங்களை நிறுத்தி பொருட்களை இறக்க அந்தந்த கடை உரிமையாளர்களுக்கு அதிகாரிகள் அறிவுறுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்