அந்தியூர் அருகே உள்ள நத்தக்கடையூரில் ஒரு சிறிய பாலம் உள்ளது. இந்த பாலத்துக்கு தடுப்பு சுவர் இல்லை. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் எதிரே வரும் வாகனத்துக்கு வழிவிடுவதற்காக பாதை ஓரத்துக்கு செல்லும்போது பக்கவாட்டில் உள்ள குழிக்குள் விழுந்து விடுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பாலத்துக்கு தடுப்பு சுவர் கட்டவேண்டும்.