திருப்பூரில் குறிப்பாக தென்மாவட்டங்களை சேர்ந்தவர்கள் அதிகம் வசிக்கிறார்கள். அதுவும் தென்காசி மாவட்டம் தென்காசி, செங்கோட்டை, கடையநல்லூர், புளியங்குடி, சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர், சிவகிரி மற்றும் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம், திருவில்லிப்புத்தூர் ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். இவர்கள் பின்னலாடை நிறுவனங்களில் பணியாற்றுகிறார்கள். இவர்களுக்கு இரவு நேரத்தில்தான் பணி முடிகிறது. பணி முடிந்து குடும்பத்துடன் இரவு 12 மணிக்கு மேல் ஊருக்கு செல்ல திருப்பூர் கோவில்வழி பஸ் நிலையத்தில் இருந்து நேரடி பஸ் இல்லை. இரவு 11 மணிவரை மட்டும் பஸ் உள்ளது. எனவே தென்மாவட்ட மக்களின் நலன் கருதி கோவில்வழி பஸ் நிலையத்தில்இருந்து இரவு 12 மணிக்கு மேல்நேரடி பஸ் இயக்க மாவட்ட நிர்வாகம் பரிசீலிக்க வேண்டும்.