சாலையில் நிறுத்தப்படும் வாகனங்கள்

Update: 2022-08-25 13:09 GMT
கிருஷ்ணகிரி-ஓசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சுங்கச்சாவடி அமைந்துள்ளது. இந்தப்பகுதியில் சாலைகளில் அதிகளவில் லாரிகள் நிறுத்தப்படுகின்றன. இதனால் வாகன ஓட்டிகளுக்கு மிகவும் சிரமமாக உள்ளது. குறிப்பாக இருசக்கர வாகனங்களில் வரும் பலரும் விபத்துக்களில் சிக்கும் நிலை உள்ளது. மேலும் கிருஷ்ணகிரி சுங்கச் சாவடியில் இருந்து கிருஷ்ணகிரி நகருக்குள் வரக்கூடிய சர்வீஸ் சாலையிலும் சாலையோரத்தில் அதிகளவில் வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இதனால் விபத்துகள் நடைபெறுகிறது. எனவே சுங்கச்சாவடி அருகில் தேசிய நெடுஞ்சாலைகளில் லாரிகள் நிறுத்துவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்