தொழில் நகரமான திருப்பூர், கோவையில் இருந்து, தாராபுரம் மார்க்கமாக மதுரை, தேனி, கம்பம், போடி மற்றும் தென்மாவட்டங்களுக்கு செல்லும் அரசு பஸ்களில் தாராபுரம் செல்லும் பயணிகளை நடத்துனர்கள் ஏற்ற மறுக்கின்றனர். இதன் காரணமாக குடும்பமாக குழந்தைகளோடு பயணிக்கும் பொதுமக்கள் துயரம் அனுபவிக்கின்றனர். மேலும் தாராபுரம் பஸ் நிலையத்திற்க்கு வராமலேயே, புறவழிச்சாலை, மேம்பாலம் வழியாக சென்று விடுகின்றனர். எனவே தயைகூர்ந்து போக்குவரத்து அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து பொதுமக்களின் துயர் துடைக்க வேண்டும்.