அந்தியூர் புதுப்பாளையம் பகுதியில் 25-க்கும் மேற்பட்ட குதிரைகள் எப்போதும் சுற்றித்திரிகின்றன. இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. மேலும் குதிரைகள் ஒன்றோடொன்று சண்டை போட்டுக்கொண்டு ரோட்டில் ஓடுகின்றன. இதனால் இருசசக்கர வாகன ஓட்டிகள் தடுமாறி கீழே விழுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ரோட்டில் சுற்றித்திரியும் குதிரைகளை பிடித்து செல்ல ஆவன செய்யவேண்டும்.