கன்னியாகுமரி-நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலை, கன்னியாகுமரி-திருநெல்வேலி நான்கு வழிச்சாலை மற்றும் சில ஊர்களில் இருந்து வரும் சாலைகளும் மகாதானபுரத்தில் உள்ள ரவுண்டானாவில் சந்திக்கின்றன. ஆனால், இந்த ரவுண்டானாவில் எந்த வித போக்குவரத்து சிக்னல் விளக்குகள் அமைக்கப்படவில்லை. இதனால், வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இரவு நேரம் வரும் வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்கி உயிழப்புகளும் ஏற்பட்டு வருகிறது. எனவே, வாகன ஓட்டிகள் நலன் கருதி ரவுண்டானா பகுதியில் போக்குவரத்து சிக்னல் விளக்குகள் அமைத்து விபத்துகளை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.