திருவாரூர் பகுதியில் நாளுக்குநாள் வாகன போக்குவரத்து அதிகரித்துக்கொண்டே வருகிறது. காலை மற்றும் மாலை நேரங்களில் முக்கிய சாலைகளில் வாகனங்கள் அதிகளவில் செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர். குறிப்பாக ஆம்புலன்ஸ் வாகனங்கள் அடிக்கடி போக்குவரத்து நெரிசலில் சிக்கிக்கொள்கின்றன. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் திருவாரூர் பகுதியில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க தேவையான இடங்களில் சிக்னல் அமைத்து போக்குவரத்தை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?