போக்குவரத்து இடையூறு

Update: 2022-08-22 15:24 GMT

நாகை மாவட்டம் வாய்மேடு, தலைஞாயிறு பகுதியில் உள்ள சாலைகளில் மாடுகள் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரிகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக இரவு நேரங்களில் கால்நடைகள் சாலையின் நடுவே படுத்துக்கொள்கின்றன. இதன்காரணமாக வாகனங்கள் மாடுகள் மீது மோதி விபத்துகள் ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள், வாகனஓட்டிகள் சாலையில் அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து செல்ல நடவடிக்கை எடுப்பார்களா?


மேலும் செய்திகள்