தோண்டிய பள்ளத்தை மூடுவார்களா?

Update: 2022-07-17 16:53 GMT
தோண்டிய பள்ளத்தை மூடுவார்களா?
  • whatsapp icon


ஆரணி பழைய பஸ் நிலையம் வளாகத்தில் கட்டண கழிப்பறை உள்ளது. அங்கிருந்து கழிவுகள் செல்லக்கூடிய கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு மாதக்கணக்கில் கழிவுநீர் சாலையில் வழிந்தோடியது. கால்வாய் அடைப்பை சரி செய்ய தூய்மைப் பணியாளர்கள் பள்ளம் தோண்டினார்கள். ஆனால் பள்ளத்தை சரியாக மூடவில்லை. எச்சரிக்கை பலகை வைத்துள்ளனர். இதனால் வாகன போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. நகராட்சி நிர்வாகம் சரி செய்யுமா?

-ராகவேந்திரன், ஆரணி.

மேலும் செய்திகள்