கால்வாய்களை தூர்வார வேண்டும்

Update: 2024-12-01 20:32 GMT

வாலாஜாவை அடுத்த குடிமல்லூர் கிராமத்தில் கழிவுநீர் கால்வாய்கள் முறையாக பராமரிக்கப்படவில்லை. தற்போது மழைப் பெய்து வருவதால் மழைநீர் வடியாமல் அருகில் உள்ள வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது. அந்தக் கிராமத்தில் ஏற்கனவே இருக்கின்ற கால்வாய்களை முறையாக தூர்வார வேண்டும். கால்வாய்கள் இல்லாத பகுதியில் புதிதாக கால்வாய் கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சந்தானபாண்டியன், குடிமல்லூர்.

மேலும் செய்திகள்