வேலூரை அடுத்த ரங்காபுரம் பஸ்நிலையம் அருகில், செங்காநத்தம் செல்லும் வழியில் உள்ள கழிவுநீர் கால்வாயின் சிலாப் உடைந்துள்ளது. இதனால் அதன்வழியாக கழிவுநீர் பொங்கி சாலையில் வழிந்தோடுகிறது. மேலும் இந்த வழியாக இரவு நேரத்தில் வருபவர்கள் பள்ளத்தில் விழக்கூடிய சூழ்நிலையும் உள்ளது. எனவே உடனடியாக கால்வாயை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அருண், ரங்காபுரம்.