வேலூரை அடுத்த ரங்காபுரம் பகுதியில் இருந்து செங்காநத்தம் செல்லும் வழியில் உள்ள பைபாஸ் சாலை பகுதியில் கால்வாய் சேதம் அடைந்து கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இந்த வழியாக செங்காநத்தம், மூலக்கொல்லை, மேலகுப்பம் பகுதி மக்கள் சென்று வருகின்றனர். நீண்ட நாட்களாக சாலை அமைக்காமல் இருந்த நிலையில், இந்த வழியில் சிமெண்டு சாலை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த கால்வாய் மட்டும் சீரமைக்காமல் சேதம் அடைந்துள்ளது. பொதுமக்கள் நலன்கருதி கால்வாயை சீரமைப்பார்களா?
-விஸ்வநாதன், ரங்காபுரம்.