திருவண்ணாமலை ஒன்றியம் அண்டம்பள்ளம் கிராமத்தில் நடுநிலைப்பள்ளி உள்ளது. அந்தப் பள்ளியில் பின் பக்கம் கழிவுநீர் தேங்கி உள்ளது. கொசுக்கடியால் மாணவர்களுக்கு காய்ச்சல் ஏற்படும் அபாயம் உள்ளது. பள்ளிக்கூடம் பின்பக்கம் தேங்கிய கழிவுநீரை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சிவா, அண்டம்பள்ளம்.