வேலூரை அடுத்த பழைய காட்பாடி மெயின் ரோட்டில் கால்நடை பராமரிப்புத்துறை அலுவலகம் அருகில் கழிவுநீர் கால்வாய் உள்ளது. இந்தக் கால்வாயில் இருந்து கழிவு நீர் வெளியேறி சாலையில் தேங்குகிறது. மேலும் அந்தப் பகுதியில் துர்நாற்றம் வீசிவருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்துடன் அவ்வழியாக சென்று வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சாலையில் செல்லும் கழிவு நீரை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாலன், பழைய காட்பாடி