திருவண்ணாமலை நகராட்சிக்கு உட்பட்ட வீராக்குட்டை தெருவில் சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இருசக்கர வாகனங்களில் செல்வோர் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.மேலும் அந்த பகுதியில் உள்ள கால்வாய்கள் அடைப்புகள் ஏற்பட்டு கழிவுநீர் சாலையில் ஓடுகிறது. மாத கணக்கில் இவ்வாறு ஓடுவதால் அந்த பகுதியில் நோய் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
-லிங்கம், திருவண்ணாமலை.