சேந்தமங்கலம் அடுத்த பேளுக்குறிச்சி கிராமம் பழனியப்பர் கோவில் தெருவில் அடிப்படை வசதிகள் ஏதும் இல்லை. இதனால் சாக்கடை வசதியின்றி கழிவுநீர் சாலையில் ஆறாக ஓடுகிறது. இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதன்காரணமாக அப்பகுதி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே பொதுமக்கள் நலன் கருதி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பழனியப்பர் கோவில் தெருவில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும்.