வேலூர் சைதாப்பேட்டையில் மாநகராட்சி 2-வது மண்டலம் 28-ம் வார்டில் பாஸ்கர்நாயுடு தெரு உள்ளது. இங்கு கழிவுநீர் கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பிள்ளையார் கோவில் தெருவில் கால்வாய் மூடியை பொத்துக்கொண்டு வெளியேறும் கழிவுநீர் தெருவில் ஓடுகிறது. இதனால் சுகாதாரச் சீர்கேடு ஏற்படுகிறது. இதனை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-மோகன்பாபு, வேலூர்.