வேலூர் ஓல்டு டவுன் அருகே குட்டைமேடு பகுதியில் தோல் கிடங்கு தெருவில் கழிவுநீர் வடியாமல் ஆண்டு கணக்கில் தேங்கி நிற்கிறது. சில வீடுகளில் கழிவுநீர் புகுந்ததால் துர்நாற்றம் வீசி, கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இந்தப்பகுதியில் கழிவுநீர் கால்வாய் அமைக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போதுள்ள சுகாதாரச் சீர்கேட்டை போக்க, கழிவுநீரை வடிய வைக்க கால்வாயைத் தூர்வார வேண்டும்.
-ஆர்.வி. வேலன், குட்டைமேடு, வேலூர்.