திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது கல்லேரி. இங்கு ஊராட்சி மூலமும், கிணறு, ஆழ்துளை கிணறு மூலமும், குழாய் மூலமும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிக்கு தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு பிறகு பொதுமக்களுக்கு வினியோகிக்கப்பட்டு வருகிறது. சில பகுதிகளில் சிறு மின்விசை தொட்டிகள் கட்டப்பட்டு, அதன் மூலம் குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தெற்குத் தெரு பகுதியில் 3-க்கும் மேற்பட்ட சிறுமின் விசை தொட்டிகள் உள்ளன. அதைச் சுற்றிலும் கழிவுநீர் அதிகளவில் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்படுவது மட்டுமின்றி கொசுக்கள் உற்பத்தியாகிறது. இதனை தடுக்க சிறுமின்விசை தொட்டி பகுதியில் இருந்து கழிவுநீர் வெளிேயற கால்வாய் கட்ட வேண்டும்.
-சிவக்குமார், கல்லேரி.