வேலூர் மாநகராட்சி 38-வது வார்டில் சஞ்சீவி பிள்ளை தெரு உள்ளது. இங்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு தார்சாலை அமைக்கப்பட்டது. ஒரு சில மாதங்களிலேயே தார், ஜல்லிக்கற்கள் பெயர்ந்து சாலை சேதமாகி விட்டது. அருகில் உள்ள கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டு சாலையில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, சாலை மற்றும் கழிவுநீர் கால்வாயை சீரமைக்க வேண்டும்.
-குமார்ரெட்டி, வேலூர்.