கால்வாயில் வெளியேறும் கழிவு நீர்

Update: 2026-11-29 13:19 GMT

நாகை நகராட்சி மாங்கொட்டை சாமி கோவில் பின்புறம் கழிவு நீர் கால்வாயில் இருந்து கழிவு நீர் தேங்கி நிற்கிறது. வீட்டு வாசலில் தேங்கி நிற்பதால், துர்நாற்றம் வீசுகிறது. இதனால் வீட்டில் சாப்பிடக்கூட முடியாமல் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். சாக்கடையில் கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகி உள்ளது. இதனால் டெங்கு, காலரா உள்ளிட் டதொற்று நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. இதுகுறித்து நாகை நகராட்சி கழிவு நீர் தேங்காதபடி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாங்கொட்டை சாமி கோவில் பின்பகுதி மக்கள், நாகை.

மேலும் செய்திகள்