நோய் பரவும் அபாயம்

Update: 2026-11-29 13:58 GMT

ஏரியூர் அருகே பெரும்பாலையில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் முறையான சாக்கடை கால்வாய் வசதி இல்லை. கழிவுநீர் சாலையில் ஓடுவதால் வாகன ஓட்டிகள் சிரமத்துடனேயே சென்று வருகின்றனர். இதனால் துர்நாற்றம் வீசுவதுடன், நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே அப்பகுதியில் சாக்கடை கால்வாய் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்