கோவை மாநகராட்சி 41-வது வார்டுக்கு உட்பட்ட பி.என்.புதூர் இந்திரா காந்தி வீதியில் சாக்கடை கால்வாய் உள்ளது. இந்த கால்வாய் கடந்த 6 மாதங்களாக தூர்வாரப்படாமல் கிடக்கிறது. இதனால் அதில் கழிவுநீர் தேங்கி இருப்பதுடன் கடும் துர்நாற்றமும் வீசுகிறது. அத்துடன் கொசுக்கள் உற்பத்தி அதிகரித்து தொற்று நோய் பரவும் அபாயமும் காணப்படுகிறது. எனவே அந்த கால்வாயை உடனடியாக தூர்வார அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும்.