சாத்தூர் நகராட்சி காமராஜர்புரம் 3-வது தெருவில் இருந்து நான்கு வழிச்சாலை இணைப்பு பகுதியில் உள்ள வாறுகாலில் கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கி கிடக்கின்றது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் இதில் எழும் துர்நாற்றத்தால் பொதுமக்களுக்கு குறிப்பாக அப்பகுதி குழந்தைகளுக்கு தொற்று நோய் ஏற்படும் அபாயம் அதிகளவில் உள்ளது. மேற்கண்ட பகுதியில் தேங்கி கிடக்கும் கழிவுநீரை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுப்பார்களா?