சாலையோரம் தேங்கும் கழிவுநீர்

Update: 2026-11-29 12:09 GMT

காட்பாடியில் மார்க்கெட் பகுதியில், அதாவது பழைய பதிவுத்துறை அலுவலகம் அருகில் சாலையோரம் நெடுஞ்சாலையில் கழிவுநீர் எந்நேரமும் தேங்கி நிற்கிறது. இந்தப் பகுதியில் தேநீர் கடை, ஜெராக்ஸ் கடை, நோட்டுப் புத்தகக் கடை, தனியார் சூப்பர் மார்க்கெட் எனப் பல்வேறு கடைகள் உள்ளன. அந்தப் பகுதியில் நெடுஞ்சாலைத்துறையால் அமைக்கப்பட்ட மழைநீர் வடிகால் செல்வதற்கு சரியான முறையில் அமைக்கப்படவில்லை எனத் தெரிகிறது. அத்துடன் இங்கு கழிவுநீரும் வெளியேற வழி இல்லாமல் ரோட்டில் தேங்கி நிற்கிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நெடுஞ்சாலையில் கழிவுநீர் தேங்குவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-தீபக்குமார்.மை.சி. செங்குட்டை , காட்பாடி.  

மேலும் செய்திகள்