திருச்சி சுப்பிரமணியபுரம் பகுதியில் உள்ள ஜெய்லானியா 6-வது தெருவில் கழிவுநீர் வடிகால் அடைப்பு ஏற்பட்டு சாலையில் கழிவுநீர் தேங்குகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைவதுடன், தேங்கும் கழிவுநீரில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய்த்தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே கழிவுநீர் கால்வாயில் ஏற்பட்டுள்ள அடைப்பை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.