குடிநீரில் கழிவுநீர் கலப்பு

Update: 2026-10-04 12:55 GMT

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி தொகுதிக்கு உட்பட்ட திருநின்றவூர் நகராட்சி 11-வது வார்டில் கடந்த ஒரு வருட காலமாக வினியோகிக்கப்படும் குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருகிறது. இதனால் அதனைப் பயன்படுத்திய அப்பகுதி மக்கள் பலருக்கு உடல்நிலை பாதிப்புகளும் ஏற்பட்டுள்ளன. இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்தவொரு உரிய நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, பொதுமக்களின் சுகாதாரத்தைக் கருத்தில் கொண்டு, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக தூய்மையான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்