திருவள்ளூர் மாவட்டம் வானகரம் மெயின் சாலையில், கடந்த சில மாதங்களுக்கு பாதாள சாக்கடை பணிக்காக பள்ளம் தோண்டப்பட்டது. ஆனால், தற்போது அந்த பணி முடிக்கப்படாமல் ஆமைவேகத்தில் நடக்கிறது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.