சேத்தியாத்தோப்பில் உள்ள காமராஜர் வாய்க்கால் பல வருடங்களாக தூர்வாரப்படடமல் கிடக்கிறது. இதனால் கழிவுநீர் வழிந்தோட வழியின்றி அதிகளவில் கழிவுநீர் தேங்கி நிற்பதால் கடும் துர்நாற்றம் வீசுவது மட்டுமின்றி, அப்பகுதி மக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயமும் உருவாகியுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து காமராஜர் வாய்க்காலை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.