சேந்தமங்கலத்தில் இருந்து ராசிபுரம் செல்லும் பிரதான சாலை காணப்படுகிறது. அங்குள்ள அரசமரம் பஸ் நிறுத்தம் அருகில் கழிவு நீர் வாய்க்கால் செல்கிறது. அதன் மேல் கான்கிரீட் தளம் போடப்பட்டுள்ளது. அதில் சில கான்கிரீட் தளம் உடைந்து கிடப்பதால் அவ்வழியே செல்வோர் அதற்குள் தவறி விழும் அபாயம் காணப்படுகிறது. எனவே அவற்றை சீரமைக்க வேண்டுமாய் எதிர்பார்த்து வருகின்றனர்.