விழுப்புரம் காமராஜர் தெருவில் இருந்து பெருமாள் கோவில் தெருவுக்கு செல்லும் தந்தை பெரியார் தெருவில் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு சாலையில் கழிவுநீர் வழிந்தோடி செல்கிறது. இதனால் அப்பகுதி மக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உருவாகி உள்ளது. எனவே பாதாள சாக்கடை அடைப்பை சரிசெய்து கழிவுநீர் தேங்காமல் இருக்க நகராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.