வடிகால் வசதி வேண்டும்

Update: 2026-05-31 10:45 GMT

திருச்சி மாவட்டம் திருவானைக்கோவில் ராமதீர்த்த தெப்பக்குளம் தென்கரை குடியிருப்பு பகுதியில் சுமார் 25 குடும்பங்களுக்கு மேல் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் முறையான கழிவுநீர் வடிகால் வசதி இல்லாததால், கழிவுநீர் சாலையிலும், குடியிருப்பு பகுதியிலும் ஓடுகிறது. மேலும் மழைக்காலங்களில் குடியிருப்புக்குள் மழைநீர் புகுகிறது. இதனால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய்த்தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இப்பகுதியில் முறையான வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டும்.

மேலும் செய்திகள்