நடவடிக்கை எடுக்க வேண்டும்

Update: 2026-07-26 12:40 GMT

நாகர்கோவில் செட்டிகுளத்தில் இருந்து பீச்ரோடு செல்லும் சாலையில் ஒரு கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரி வழியாக ராமன்புதூருக்கு செல்லும் சாலையின் நடுவே பாதாள சாக்கடை குழாய்கள் பதிக்கபட்டுள்ளது. அதில் கல்லூரியின் அருகில் பாதாள சாக்கடை குழாயில் அடைப்பு ஏற்பட்டு அதன் மூடி வழியாக கழிவுநீர் சாலையில் பாய்தோடுகிறது. இதனால் அந்த வழியாக கல்லூரிக்கு நடந்து செல்லும் மாணவ-மாணவிகள், வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, மாணவர்கள் நலன்கருதி குழாயில் அடைப்பை சரிசெய்து கழிவுநீர் வெளியேறுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-வீரா, செந்தூரான்நகர், கோட்டார்.

மேலும் செய்திகள்