ஆற்றூர் சந்திப்பில் இருந்து தேமானூர் பகுதி வரையும் சாலையோரத்தில் மழைநீர் ஓடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஓடையை முறையாக பாராமரிக்காததால் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே பொதுமக்கள் நலன்கருதி மழைநீர் ஓடையை தூர்வாரி சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அகஸ்டின்,ஆற்றூர்.