குடிநீர் தொட்டியை சூழ்ந்த கழிவுநீர்

Update: 2026-05-03 13:32 GMT

மாரண்டஅள்ளி அடுத்த அத்திமுட்லு ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ள குடிநீர் தொட்டி கடந்த சில ஆண்டுகளாகவே சுகாதாரமின்றி கழிவுநீர் சூழ்ந்துள்ளது. இதனால் மக்கள் அங்கு தண்ணீர் பிடிக்க பெரும் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளது. இது பற்றி பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் பலனில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கழிவுநீர் சூழ்ந்துள்ள குடிநீர் தொட்டியை சுத்தம் செய்து மக்களுக்கு சுகாதாரமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்