ஈரோடு பாப்பாத்திகாடு 2-வது வீதியில் சைவ கருப்பராயன்கோவில் அருகே சாக்கடை கால்வாய் செல்கிறது. இதில் கழிவுகள் கொட்டப்படுகிறது. இதனால் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கி நிற்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுகிறது. சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவ வாய்ப்புள்ளது. கால்வாயில் ஏற்பட்டுள்ள அடைப்புகளை நீக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?