ஏரியூர் அருகே உள்ள கூர்காம்பட்டி கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த ஊரில் போதுமான கழிவுநீர் கால்வாய் வசதிகள் இல்லை. இதன் காரணமாக அனைத்து வீதிகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் பிரதான சாலையில் ஆறு போல ஓடுகிறது. இந்த சாக்கடை நீர், அரசு பள்ளி வளாகம் அருகே குட்டை போல தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதனால் இந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. கொசுக்கள் உருவாகி, நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.