ஆபத்தான கழிவுநீர் கால்வாய்

Update: 2026-02-01 13:38 GMT

தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி நுழைவுவாயில் முன்பு பஸ் நிறுத்தம் உள்ளது. இங்கு பொதுமக்கள், பயணிகள் நிற்கும் நடைபாதை பகுதியை ஒட்டி தரைமட்டத்தில் உள்ள கழிவுநீர் கால்வாயில் மேல்பகுதி சேதமடைந்து இடைவெளியுடன் காணப்படுகிறது. இதனால் இந்த பகுதியில் நடந்து செல்பவர்கள் மற்றும் பஸ்களுக்காக காத்திருப்பவர்கள் சற்று கவனக்குறைவாக இருந்தாலும் இதில் தவறி விழுந்து காயம் அடையும் அபாயம் உள்ளது. எனவே ஆபத்தான நிலையில் உள்ள கழிவுநீர் கால்வாய் மேல் மூடியை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்