ரோட்டில் செல்லும் கழிவுநீர்

Update: 2025-12-14 09:30 GMT

அவினாசி தாலூகா ஆலத்தூர் கிராமம் 7 -வது வார்டு சுவாமி நகரில் சுமார் 100 -க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இந்த பகுதியில் நீண்ட நாட்களாக சாக்கடை வசதியின்றி கழிவுநீர் வீதியில் தேங்கியபடி உள்ளது. ஊராட்சி நிர்வாகத்தின் நிதியில் பாதி மட்டும் சாக்கடை கால்வாய் கட்டப்பட்டுள்ளது. பாதி அளவு கட்டி உள்ளதால் சாக்கடை நீர் தேங்கி நிற்கிறது. இதனால் குழந்தைகள் வாந்தி, காய்ச்சல் நோய்களால் பாதிப்படைகின்றனர். மேலும் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு, மலேரியா உள்பட பல்வேறு நோய்கள் பரவ வாய்ப்பு உள்ளது. எனவே சுவாமி நகரில் ரோட்டில் செல்லும் கழிவுநீரை தடுக்க சாக்கடை கால்வாய் வசதி அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும்.

ஆறுமுகம், ஆலத்தூர்.

மேலும் செய்திகள்