வாலாஜா பஸ் நிலையம் எதிரே அம்மா உணவகம் உள்ளது. அதன் அருகில் பழைய வட்டாட்சியர் அலுவலக பகுதியில் சேதம் அடைந்த கால்வாயில் இருந்து கழிவுநீர் பரவி கொசு உற்பத்தியாகிறது. அங்கு, ஏலம் விடப்படாத வாகனங்கள் குவிந்து கிடக்கின்றன. நகராட்சி நிர்வாகம் கால்வாயை தூர்வார வேண்டும். அந்தப் பகுதியை தூய்மைப்படுத்த நடவடிக்கை வேண்டும்.
-சக்திவேல், வாலாஜா.