ஆரணியை அடுத்த சித்தேரி ஊராட்சிக்கு உட்பட்ட சக்திநகர் எம்.ஜி.ஆர். தெருவில் முறையாகப் பக்க கால்வாய்கள் இல்லாததால் வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் தெருவில் தேங்குகிறது. லேசான தூறல் மழைப்பெய்தாலும் மழைநீர் சாலையிலேயே தேங்குகிறது. தேங்கும் நீரில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. சக்திநகர் எம்.ஜி.ஆர். தெருவில் முறையான பக்க கால்வாய் அமைத்துத் தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-குருமூர்த்தி, சித்தேரி.