திருப்பத்தூர் தர்மராஜா கோவில் தெரு பகுதியில் உள்ள சாலையில் பள்ளங்களில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால், அந்தச் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்தச் சாலையைச் சீரமைத்து, கழிவுநீர் தேங்காதவாறு இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-குமரேசன், திருப்பத்தூர்.