சாலையில் வழிந்தோடும் கழிவுநீர்

Update: 2026-01-25 17:59 GMT
சின்னசேலம்- மூங்கில்பாடி சாலையின் ஓரம் கழிவுநீர் வாய்க்கால் செல்கிறது. முறையான பராமரிப்பு இல்லாத காரணத்தால் இந்த வாய்க்கால் தூர்ந்துபோய் கிடக்கிறது. இதனால் கழிவுநீர் சீராக செல்ல முடியாமல் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. மேலும் கழிவுநீர் சாலையில் வழிந்தோடுகிறது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உருவாகி உள்ளது. இதை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்