குளம்போல் நிற்கும் தண்ணீர்

Update: 2025-11-16 13:56 GMT

பர்கூர்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் கந்திகுப்பத்தில் இருந்து குறும்பர் தெரு கிராமத்திற்கு செல்லும் சாலையோரம் கழிவுநீர் கால்வாய் உடைந்து குளம்போல் தேங்கி நிற்கிறது. இதில் தவறி விழுந்தால் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் தொற்றுநோய் பரவும் அபாயமும் உள்ளது. மேலும் கழிவுநீர் தேசிய நெடுஞ்சாலையிலும் செல்கிறது. இதனால் பொதுமக்களும், பாதசாரிகளும், வாகன ஓட்டிகளும் மிகவும் அவதிக்குள்ளாகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கழிவுநீர் கால்வாயை சீரமைக்க வேண்டும்.

-மணி, பர்கூர்.

மேலும் செய்திகள்