கடையநல்லூர் நகராட்சி சிந்தாமதார் பள்ளிவாசல் தென்வடல் தெருவில் வாறுகாலில் அடைப்பு உள்ளதால் கழிவுநீர் நிரம்பி சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் சுகாதாரக்கேடு ஏற்படுவதுடன் போக்குவரத்துக்கு இடையூறாகவும் உள்ளது. அந்த வழியாக வாகனங்கள் செல்லும்போது, நடந்து செல்கிறவர்களின் மீது கழிவுநீர் தெறிக்கிறது. எனவே வாறுகால் அடைப்பை அகற்றி, கழிவுநீர் முறையாக வழிந்தோடச் செய்வதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.