காங்கயம் நகராட்சிக்கு உட்பட்ட கே.ஜி.கே.நகர் அருகே அய்யாசாமி நகர் காலனி பிரிவில் கழிவுநீர் சாலையோரம் தேங்கி நிற்கிறது. இப்பகுதியில் உணவகங்கள், கடைகள், கோவில் ஆகியவை உள்ளன. குளம் போல் தேங்கி நிற்கும் கழிவுநீரில் இருந்து துர்நாற்றமும், நோய் பரவும் அபாயமும் உள்ளது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். சம்பந்தப்பட்ட துறைக்கு தகவல் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. மழைக்காலங்களில் இந்த குட்டை நிறைந்து சாலையில் அசுத்தமான கழிவுநீர் வழிந்தோடும் நிலை ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கதிரவன், காங்கயம்.