தேங்கி நிற்கும் மழைநீர்

Update: 2025-10-26 17:18 GMT

சேந்தமங்கலம் பழைய பஸ் நிலையம் நுழைவு வாயில் பகுதியில் பெரிய தேர் நிலை உள்ளது. தேரின் படிக்கட்டுகள் சேதம் ஆகியதால் 6 மாதத்திற்கு முன்பு படிக்கட்டுகள் மற்றும் தேர் நிலை முழுவதும் புதுப்பிக்கப்பட்டது. இந்த நிலையில் சேந்தமங்கலம் பகுதியில் மழை பெய்யும் போது அந்த தேர் நிலை வளாகத்தில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த தேர் நிலை சுவர் பாதிக்கப்படும் நிலையில் காணப்படுகிறது. எனவே அங்கு மழைநீர் தேங்காத வண்ணம் கால்வாய் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-விஜயகுமார், சேந்தமங்கலம்.

மேலும் செய்திகள்